ஒரு நாட்டுக்கு அடையாளமாக திகழ்வது அந்நாட்டின் தேசியக் கொடிதான். இந்திய தேசியக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ஜூலை 22, 1947 அன்று ஏற்கப்பட்ட கொடியாகும்.

ஜனவரி 26, 1950-இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக இருந்து வருகிறது. இது மூவர்ணத்தை கொண்டது.

தேசியக் கொடியை ஆந்திராவைச் சேர்ந்த பிங்கலி வெங்கய்யா வடிவமைத்தார். மூவர்ண தேசியக் கொடிக்கு 1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி இந்திய அரசின் அப்போதைய ஆங்கிலேயே நிர்வாக சபை ஒப்புதல் வழங்கியது. அந்தக் கொடியே 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்டது.