சமத்துவ தினத்தை முன்னிட்டு அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆர். ஏ. புரத்திலுள்ள முனைவர் அம்பேத்கர் அவர்களின் மணிமண்டபத்திலுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நிறுவனத் தலைவரும்,சமூக சேவகருமான சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் மலர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சுரேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான ஸ்ரீனிவாசன், துரைராஜ், தினேஷ் பார்த்தசாரதி, ஹரி பாபு, சரவணன் அஜய்குமார்,சஞ்சய் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.