சென்னையில் குற்றச்செயல்களை தடுக்க சென்னை பெருநகர் முழுவதும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன. இவைகளில் பெரும்பாலானவை தற்போது இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதிலும் சுணக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் கணக்கிடப்பட்டதில் 12,355 கேமராக்கள் பழுதானது தெரியவந்தது. இதுகுறித்து ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை சரி செய்வதற்கு 2021-2022ம் நிதி ஆண்டில் ரூ.1 கோடியே 17 லட்சத்து 37,250 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணியினை விரைந்து முடிக்கும்படியும் பணிகள் முடிந்தவுடன் அனைத்து கேமராக்களும் நல்ல முறையில் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என காவல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.