நடைபெறவிருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.

இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுவதாக தகவல் வெளியானது. தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியத்தில், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு, நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரகுபதி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஒன்றியம், வெளிக்காடு ஊராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுபா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதே போல 9 மாவட்டங்களில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.