தெலங்கானா மாநிலத்தில் யாதாத்ரிபகுதியில் ரூ. 2000 கோடி செலவில் புதுப்பித்து கட்டப்பட்ட லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் கனவு திட்டமானயாதாத்ரி லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து நேற்று காலைஇக்கோயிலில் உள்ள 7 கோபுரங்களிலிலும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தெலங்கானா மாநிலம், யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் மலை மீது அமைந்துள்ள இந்த லட்சுமி நரசிம்மர் கோயில் மிக பிரசித்தி பெற்றதும், பழமை வாய்ந்ததுமாகும். ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உள்ள முதல்வர் கே. சந்திரசேகர ராவ், இக்கோயிலை திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்று கட்ட வேண்டும் என முடிவு செய்தார்.

இதற்கான சீரமைப்பு பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி விஜயதசமியன்று தொடங்கியது. 2.50 லட்சம் கருப்பு கிரைனைட் கற்களால் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுமார்66 மாதங்கள் ஆன இக்கோயில் கட்டுமான பணிகளில் ஸ்தபதி சுந்தர்ராஜன் தலைமையில் 800 சிற்பிகள், 1500 தொழிலாளர்கள் இரவும், பகலுமாக பணியாற்றியுள்ளனர். இக்கோயிலில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் அமைக்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இக்கோயில் கட்டுமான பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி இதுவரை ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் கர்ப்பக்கிரகம் மற்றும் அதன் சுற்று சுவர்களுக்கு மட்டும் ரூ.250 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கிரிவலம் செல்ல 5.5 ஏக்கரில் சுற்றுப்பாதையும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று கோயி லில் காலை 9 மணியளவில் யாக சாலையில் மகாபூர்ணாஹுதி நடந்தது. அதன் பின்னர் உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, 7 கோபுரங்களில் கலச பூஜைகள் தொடங்கின. இம்மாதம் 21-ம் தேதி முதல் நாட்டில் உள்ள முக்கிய நதிநீர்களை கொண்டு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. அங்குராற்பன நிகழ்ச்சிகள் நடந்து முடிந்ததும், கும்பாபிஷேக பணிகள் தொடங்கின. ராஜகோபுரம் உட்பட அனைத்து 7 கோபுரங்களுக்கும் ஒரே சமயத்தில் கும்பாபிஷேக பணிகள் நடந்தது. இதில் 92 வேத பண்டிதர்கள் பங்கேற்றனர். அப்போது கோபுரம் மீது சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.

பின்னர் புண்ணிய தீர்த்தங் களால் கலசாபிஷேகம் நடைபெற் றது. இந்த கும்பாபிஷேக விழாவில் திரளானோர் கலந்துகொண்டனர். அதன் பின்னர் மூலவருக்கு சிறப்புபூஜைகள் நடைபெற்றது. இதில்தம்பதி சமேதராக முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் கோயில் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய ஸ்தபதி சுந்தர்ராஜன் உட்பட கோயில் அதிகாரிகள், அமைச்சர் களுக்கு முதல்வர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். மதியம் முதல் பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்பட் டனர். கோயிலை சுற்றிலும் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.