இந்த கடனில் பெண்களுக்கு 0.50 சதவீதம் வரை தள்ளுபடியும் உண்டு.

மாணவர்கள் தங்கள் கனவை நிறைவேற்றி கொள்ள கைக்கொடுக்கும் எஸ்பிஐ வங்கியின் கல்வி கடன் குறித்து தான் பார்க்க போகிறோம்.

வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் என்பது உங்களின் நீண்ட நாள் கனவா? பணப்பிரச்சனை காரணமாக அதை தள்ளிப்போட்டுக் கொண்டு வருகிறீர்களா? கவலை வேண்டாம். உங்கள் கனவை நிறைவேற்றிக்கொள்ள எஸ்பிஐ வங்கி கைக்கொடுக்கிறது. யூஸ் பண்ணிக்கோங்க. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வெளிநாட்டில் கல்வி பயில மாணவர்களுக்கு ரூ .7.30 லட்சம் முதல் ரூ .1.50 கோடி வரை கடன் வழங்குகிறது. இனி மாணவர்கள் எந்த தயக்கமும் இன்றி தங்கள் படிப்பை தொடங்கலாம்.

எஸ்பிஐ குளோபல் எட்-வாண்டேஜ் என அழைக்கப்படும் இந்த லோன் திட்டத்தின் கீழ் வழக்கமான பட்டதாரி படிப்பு மற்றும் முதுகலை பட்டம் படிக்க நினைப்பவர்கள் லோன் பெறலாம். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் படிப்பதற்கு இந்த திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களுக்கு ரூ .7.50 லட்சம் முதல் 1.5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனுக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதம் ஆகும். இந்த கடனில் பெண்களுக்கு 0.50 சதவீதம் வரை தள்ளுபடியும் உண்டு.

கடன் வாங்கிய 6 மாதங்களுக்குப் பிறகு இந்தக் கடனை நீங்கள் திருப்பிச் செலுத்தலாம். வெளிநாட்டில் படிக்கும் எந்த இந்திய மாணவரும் 15 ஆண்டுகளில் கடன் பணத்தை திருப்பிச் செலுத்தலாம் என்பது இந்த கடனில் அளிக்கப்படும் கூடுதல் சிறப்பு.மாணவர்களின் படிப்புக்கு கைக்கொடுக்கும் எஸ்பிஐயின் இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவலுக்கு ஆன்லைனில் பார்க்கவும். அல்லது வங்கியை அணுகியும் தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here