தமிழகத்திலுள்ள அரசு மருத்துவ மனைகளில் முதல்முறையாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழிலா ளிக்கு அதிநவீன வசதியுடன் கூடிய ஆஞ்சியோகிராம் மற்றும் ஸ்டென்ட் மூலம் மாரடைப்பு நீக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பன்னோக்கு உயர் மருத்துவச் சிகிச்சை மையம் 2019-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதில், இதயம், மூளை நரம்பியல் உட்பட பல்வேறு துறைகளில் அதிநவீன சிகிச்சை சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதய நோய் சிகிச்சைத் துறையில் முதல் முறையாக அதி நவீன ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி என்ற தொழில்நுட்பத்துடன் கூடிய சிகிச்சை 10 நாள்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டாரத்திலுள்ள மேலஊரணிபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் எம்.செல்லையனுக்கு (56) ஆஞ்சியோகிராம் மற்றும் ஸ்டென்டிங் சிகிச்சை அண்மையில் செய்யப்பட்டது. இதன் மூலம் செல்லையனுக்கு மாரடைப்பு நீக்கப்பட்டு, சிகிச்சையும் வெற்றி கரமாக அமைந்தது.

இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் ஜி.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:

தமிழக முதல்வரின் வழிகாட்டுத லின்படி, ரூ.1.35 கோடி செலவில் அதிநவீன ஓ.சி.டி. இதய ஆஞ்சி யோகிராம் சிகிச்சை கருவி இம் மருத்துவமனையில் அமைக் கப்பட்டுள்ளது. இதன் மூலம், செல்லையனுக்கு மாரடைப்பு நீக்கப்பட்டுள்ளதுடன், அவரது இதய தசைகளின் உந்தும் திறன் 30 சதவீதத்திலிருந்து 54 சதவீத மாக மேம்பட்டுள்ளது. தற்போது செல்லையன் ஆரோக்கியமாக இருந்தாலும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்புக்காக மருத்துவமனையில் உள்ளார் என்றார்.