சென்னை பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் செய்யப்படும் கைரேகை பதிவு ஆவணங்களை
பறித்து சென்ற நபரை அங்கிருந்த பணியாளர்கள் பிடித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை பல்லாவரத்தில் உள்ளது சார் பதிவாளர் அலுவலகம். இங்கு பட்டப்பகலில் அலுவலகத்தில் ஒரு கும்பல் புகுந்தது. அப்போது பத்திரப் பதிவு செய்யும் போது கைரேகை பதிவு செய்யப்படும் ஆவணங்கள் அடங்கிய புத்தகத்தை அங்கிருந்த அரசு அலுவலர் கையில் இருந்து பறித்து சென்றனர். இதையடுத்து அந்த கும்பலில் இருந்த
ஒருவரை சார் பதிவாளர் அலுவலக பணியாளர்கள் மடக்கி பிடித்தனர். அந்த நபரை குரோம்பேட்டை போலீஸில் ஒப்படைத்தனர்.
காவல்துறை விசாரணை செய்ததில் பிடிப்பட்ட நபரின் பெயர் கண்ணன் (எ) கோல்டு கண்ணன் தெரிய வந்தது. இவன் ஒரு என்ஜீனியரை ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மடிப்பாக்கம் காவல்துறை தேடி வருகின்றனர். போலி ஆவணம் தயார் செய்து மடிப்பாக்கம் ராம் நகரில் பிளாட் எண் : 726,728 மனையை அபகரித்த வழக்கில் மத்திய குற்றப் பிரிவு காவல் துறை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.