அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 10) வெளியிட்ட அரசாணையில், அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு விரைவுப் பேருந்துகள் 7 ஆண்டுகள் வரை இயங்கலாம் அல்லது 12 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே விரைவுப் பேருந்துகளுக்கு 3 ஆண்டுகள் இயங்கலாம் அல்லது 7 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் எனக் கட்டுப்பாடு இருந்தது.

மற்ற அரசுப் பேருந்துகள் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் என்ற கட்டுப்பாட்டை, 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் என்று மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.