காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடந்த2018-ம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியை தமிழகவாழ்வுரிமைக் கட்சி தலைவர்தி.வேல்முருகன் தலைமையிலானகட்சியினர் முற்றுகையிட்டபோது,அந்த சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீஸார் தி.வேல்முருகன் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவ்வழக்கு உளுந்தூர்பேட்டை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் சண்முகநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 5 பேர் மட்டும் ஆஜராயினர்.

தி.வேல்முருகன் எம்எல்ஏ, த.வா.க மாவட்டச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட 9 பேர் ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜர்ஆகாத தி.வேல்முருகன் உட்பட9 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நடுவர் சண்முகநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.