திண்டுக்கல்: அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜக தான் தமிழகத்தை ஆளும் என நாங்கள் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை, என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்டபணிகளை திறந்துவைத்து, 212 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திண்டுக்கல் புரட்சியின் பெயர், எழுச்சியின் பெயர், வீரத்தின் பெயர். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போராடிய வேலுநாச்சியார், ஊமைத்துரையும் தங்கள்...
