இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக காப்பீட்டு சட்டங்கள் (திருத்த) மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை 74 சதவீதம் என்ற அளவில் அந்நிய நேரடி...
Category: வர்த்தகம்
அமெரிக்காவுக்கான ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 3 மடங்கு உயர்வு
உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் (ஸ்மார்ட் போன்) மதிப்பு கடந்த அக்டோபரில் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த அக்டோபரில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 147 கோடி டாலர் மதிப்பிலான அறிதிறன் பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது சுமார் மூன்று மடங்காகும். அப்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் மதிப்பு 46 கோடி...
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது: SEBI எச்சரிக்கை
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வரலாற்றில் இல்லாத வகையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், அமெரிக்க பங்குச் சந்தையின்...


