2025 ஆண்டுக்கான கேல் ரத்னா – அர்ஜுனா விருதுக்கு விளையாட்டு வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உயரிய கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அர்ஜூனா விருதுக்கு தடகளம், ஹாக்கி, செஸ், டேபிள்...
Category: விளையாட்டு
விஜய் ஹசாரே தொடரில் விராட் கோலி புதிய சாதனை
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 16,000 ரன்களைக் கடந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்து சாதனை படைத்துள்ளார். விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் டெல்லி மற்றும் ஆந்திர அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய ஆந்திர அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 298...
இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா-இலங்கை இடையேயான 2-ஆவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில்...
ஆஷஸ் 2-ஆவது டெஸ்டில் ஜோ ரூட் சதம்: முதல் நாளில் இங்கிலாந்து 325 ரன்கள் குவிப்பு
ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் விட்டுகொடுத்து 325 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில்...
WPL Auction 2026: விலை போகாத ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி
அடுத்த ஆண்டு 4-ஆவது மகளீர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி விலை போகாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 அணிகள் இடையிலான 4-ஆவது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று (நவ.27) டெல்லியில் நடைபெற்றது. ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா...
டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா: மக்களிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட், போட்டியில் தோல்வியடைந்ததற்காக நாட்டு மக்களிடன் மன்னிப்பு கேட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட்...
கம்பீர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கம்?: பிசிசிஐ விளக்கம்
2027 வரை கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக தொடருவார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்த மோசமான...
பெர்த் மைதானத்தின் பிட்ச் மிகச் சிறந்தது: ஐசிசி
ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தின் பிட்ச் மிகச் சிறந்தது என்று ஐசிசி தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த நவ. 21-ஆம் தேதி தொடங்கி அடுத்த நாளே முடிவடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. பெர்த் மைதானத்தில் இரண்டு நாளில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி இதுதான். இதனால் இந்த பிட்ச் பல்வேறு விமர்சங்களுக்கு உள்ளானது....
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நாளை தொடக்கம்
14-ஆவது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நாளை (நவ.28) முதல் சென்னை, மதுரையில் தொடங்குகிறது. 21 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி 1979-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிரான்சில் நடந்த அந்த போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. கடைசியாக கடந்த 2023-ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் ஜெர்மனி கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 13 போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஜெர்மனி 7 முறை பட்டம் வென்று சாதித்துள்ளது. அதற்கு...
மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்திய அணி சாம்பியன்
2-ஆவது மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டியில் சீன தைபே அணியை இறுதிப்போட்டியில் வென்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 11 அணிகள் இடையிலான 2-ஆவது மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி (4 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், வங்காளதேசம் (3 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், ‘பி’ பிரிவில் சீன தைபே (5 ஆட்டங்களிலும் வெற்றி)...








