ராமேஸ்வரம் கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத அமாவாசை, சர்வ அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பூஜை செய்வது வழக்கம். அதன்படி ஆவணி மாத சர்வ அமாவாசையையொட்டி (செப்.10) அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். முன்னதாக அவர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடியதை தொடர்ந்து கடற்கரையில் அமர்ந்து...
Category: ஆன்மிகம்
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்தில் அன்னதானம்: உணவுப்பாதுகாப்புத்துறை சான்றிதழ் கட்டாயம்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப். 17 ல் நடக்கஉள்ள நிலையில், பக்தர்களுக்காக அன்னதானம், நீர்மோர், பிற உணவுப்பொருட்களை வழங்குவோர் ஆன்லைனில் பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும் என உணவுப்பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் அன்னதானம், பிரசாதங்கள் தயாரித்து வழங்குவதற்கான பிரத்யேக ‘போக்’ சான்றிதழை மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வழங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கான ‘போக்’ சான்றிதழ் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. யாகசாலை, கும்பாபிஷேகத்தின் போது மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள், ஆவணி மூலவீதிகள், மாரட்...
திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகுந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி முன்னிட்டு வரும் மே 30-ம் தேதி கிரிவலம் வர உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மலையே மகேசனாக எழுந்தருளி காட்சி தரும் திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தநேரம் வரும் மே 30-ம் தேதி பகல் 12.30 மணிக்கு தொடங்கி 31-ம் தேதி பகல் 2.41 மணிக்கு நிறைவடைகிறது. எனவே வரும் 30-ம்...
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடக்கம்
கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி, தேவாலயங்களில் இன்று சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏசு உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாகவும், அதன் முதல் நாள் சாம்பல் புதன்கிழமையாகவும் அனுசரிக்கப்படும். இந்த 40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள்...
உத்தரகாண்டில் உள்ள பள்ளிகளில் தினமும் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம் – பாஜக முதல்வர் உத்தரவு!
டெல்லி: உத்தரகாண்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பகவத் கீதை வாசிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கலாச்சாரம், வாழ்க்கை தத்துவங்களுடன் மாணவர்களை ஒருங்கிணைத்து, முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்க இந்த முயற்சி உதவும் என உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. எக்ஸ் சமூக ஊடகத்தில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள பதிவில், “அரசுப் பள்ளிகளில் கீதையின் வசனங்களை ஓதுவதை எங்கள் அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த முயற்சி மாணவர்களை இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள் மற்றும்...
இஞ்சிமேடு கிராமத்தில் சுவாதி நட்சத்திரம் மகா யாகம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, அடுத்த இஞ்சிமேடு, வரதராஜ பெருமாள் கோவில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சுவாதி நட்சத்திர மகாயாகம் நடந்தது. காலையில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, தாயார் பெருந்தேவி தாயார், சக்கரத்தாழ்வார், சீதாதேவி, லட்சுமி நரசிம்மர், ஆகிய சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவில் யாகசாலை மண்டபத்தில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவி, தாயாரை பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைத்து, பல்வேறு வண்ண அரிசி மூலம் சுவாதி...





