இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், இணைப்பு நாடுகள் மற்றும் அழைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5...
Category: உலகம்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டார்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, தவெக ஆட்சிக்கு வந்தது முதல் 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 லட்சத்து 2,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சத்து 21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை இஸ்ரேலியகுடியேற்றப் பொருட்களுக்கு பிரிட்டன் தடை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் தூதரக நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், பிரிட்டன் இந்த புதிய தடையை அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் எட் மிலிபாண்ட் நாடாளுமன்றத்தில் கூறுகையில், ‘’மேற்குக் கரையில் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதால் ஏற்படும் அநீதியையும் துயரத்தையும் இனியும் வெறுமனே கண்டிப்பதுடன் பிரிட்டன் நிறுத்திக்கொள்ள...
கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்பு? ஈரான் ஊடகங்கள் பரபரப்பு தகவல்
கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல் அதிகரித்துள்ள நிலையில் ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவில் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தப்படுவதாக ஈரான் ஊடகங்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதுதொடர்பாக ஈரானில் உள்ள தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளில், கார்க் தீவு அருகே ஏராளமான வெடிச்சத்தங்களை கேட்கப்பட்டதாகவும், தீவின் அருகே ஈரானின் டேங்கர் ஒன்றை அமெரிக்கா தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி ஈரான் அல்லது...
துருக்கி, பாகிஸ்தான், சவுதி பாதுகாப்பு கூட்டணி: ‘மக்கா பாதுகாப்பு கூட்டணி’ என பெயர் சூட்டல்
துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கையெழுத்தான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு ‘மக்கா பாதுகாப்பு கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிதான் நேற்று அறிவித்தார். இந்தக் கூட்டணியின் முதல் பொதுச் செயலாளர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார். இஸ்தான்புல்லில் நடைபெற்ற கூட்டணியின் முதலாவது மூலோபாய அரசியல் மற்றும் பாதுகாப்புக் குழு கூட்டத்துக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்...
ரூ.6,000 லஞ்சம் வாங்கிய குடிநீர் வாரிய அதிகாரி கைது
மாதவரம்: குடிநீர் இணைப்பு வழங்க, 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குடிநீர் வாரிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 29வது வார்டு, தணிகாச்சலம் நகரைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 46. இவர், தன் புது வீட்டிற்கு, குடிநீர் இணைப்புக்கோரி, குடிநீர் வாரிய உதவி பொறியாளர் முருகேசனை அணுகியுள்ளார். இணைப்பு வழங்க, முருகேசன், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த ஜெயகுமார், லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய...
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்தில் அன்னதானம்: உணவுப்பாதுகாப்புத்துறை சான்றிதழ் கட்டாயம்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப். 17 ல் நடக்கஉள்ள நிலையில், பக்தர்களுக்காக அன்னதானம், நீர்மோர், பிற உணவுப்பொருட்களை வழங்குவோர் ஆன்லைனில் பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும் என உணவுப்பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் அன்னதானம், பிரசாதங்கள் தயாரித்து வழங்குவதற்கான பிரத்யேக ‘போக்’ சான்றிதழை மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வழங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கான ‘போக்’ சான்றிதழ் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. யாகசாலை, கும்பாபிஷேகத்தின் போது மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள், ஆவணி மூலவீதிகள், மாரட்...
வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா இப்போது வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. எனது உத்தரவின் பேரில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர், வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் தனியார் வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டனர். இதன் மூலம்,...
பட்டதாரி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு: 2 அதிகாரிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
திருச்சி: பட்டதாரி ஆசிரியரிடம், 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றிய சந்திர சேகரன், 65, தேவதாஸ், 61, ஆகிய இருவருக்கும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, பாலகிருஷ்ணன்பட்டி அரசு ஆதிதிராவிடர் உயர் நிலைப்பள்ளியில் பட்ட தாரி ஆசிரியராக பணி யாற்றியவர் கண்ணன். இவர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்யாமல் இருக்க, திருச்சி மாவட்ட ஆதி திராவிடர்...
நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் இதுவரை 84 பேர் மீட்பு; 320 பேர் மாயம்
புதுடில்லி: நேபாள வெள்ளத்தில் மாயமாகி இருக்கும் இந்தியர்கள் 320 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியுள்ள இந்த பெரும் துயரத்தில், தமிழகத்தில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்ற 100 பேர் உட்பட,...









