கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள...
நாளை மாரத்தான் போட்டி- மெட்ரோ ரெயில் இயக்கம்!
சென்னை: இந்திய கடற்படையை போற்றும் விதமாக கடற்படை சார்பில் சென்னை நேப்பியர் பாலம் அருகே முதன்முறையாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாளை அதிகாலை 4.45 மணி தொடங்கி 6.30 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மாரத்தானில் பங்கேற்பவர்களின் வசதிக்காக நாளைய தினம் அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது அதே வேளையில், எம்.ஜி.ஆர். சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம்...
கதவை உடைத்து சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார்!
தயாரிப்பு நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்தாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்; சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இல்லத்தை இன்று அதிகாலை முதல் போலீசார் சுற்றிவளைத்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் தொடர்பான ஒரு வழக்கு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து அவருக்கு சமன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, “ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில்...
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக காப்பீட்டு சட்டங்கள் (திருத்த) மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை 74 சதவீதம் என்ற அளவில் அந்நிய நேரடி...
“திருப்பரங்குன்றம் தீப பிரச்சினை இந்துக்களுக்கு சாதகமாக தீர்க்கப்பட வேண்டும்” – மோகன் பாகவத்
திருச்சி: ‘‘திருப்பரங்குன்றம் பிரச்சினை இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு என்ன தேவையோ, அதை நாங்கள் செய்வோம்’’ என்று ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத் தெரிவித்தார். திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கல்வியாளர்கள், பிரபலங்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோரை ஆர்எஸ்எஸ் தேசியத் தலைவர் மோகன் பாகவத் நேரில் சந்தித்து கலந்துரையாடினார் அப்போது ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகியும், பாஜக மூத்த தலைவருமான ஹெச்.ராஜா, “திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழகத்தில்...
2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலுக்கு முன்பாக, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நாங்கள
அமெரிக்காவுக்கான ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 3 மடங்கு உயர்வு
உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் (ஸ்மார்ட் போன்) மதிப்பு கடந்த அக்டோபரில் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த அக்டோபரில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 147 கோடி டாலர் மதிப்பிலான அறிதிறன் பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது சுமார் மூன்று மடங்காகும். அப்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் மதிப்பு 46 கோடி...
ஆஷஸ் 2-ஆவது டெஸ்டில் ஜோ ரூட் சதம்: முதல் நாளில் இங்கிலாந்து 325 ரன்கள் குவிப்பு
ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் விட்டுகொடுத்து 325 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில்...
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ‘காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவரது நடிப்பில் கடந்த மாதம் ‘தீயவர் குலை நடுங்க’ என்ற படம் வெளியானது. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷனின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கங்கா...
”லாக்டவுன்” படத்தின் டிரெய்லர் வெளியானது
நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் ‘லாக் டவுன்’. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படம் கொரோனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இத்திரைப்படம் டிசம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில்...








