மிசாவில் சிறையில் இருந்து எனக்கு பெரும் கொடுமைகள் நடந்தன, சிறையில் அடி வாங்கிய தழும்பு இப்போதும் இருக்கிறது. என் தாடை உடைந்தது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’சட்டப்பேரவை யில் நடந்த சர்ச்சைகள் தமிழ் மக்களுக்கும், நமது உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியதை நான் உணர்கிறேன். இந்தச் சர்ச்சையில் எனது சிறை வரலாறு இருப்பதால், அதைப் பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிறையில் பல கொடுமைகள் நடந்தன....
Tag: Tamilnadu
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
பதிப்புரிமை உத்தரவை மீறி பாடல்களை தொடர்ந்து பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி இசை நிறுவனமான சரிகமா இந்தியா, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி, தங்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறப்படும் பாடல்களை இளையராஜா தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அவற்றின் மீது உரிமை கோரி வருவதாகவும் சரிகமா குற்றம்சாட்டியுள்ளது. 134...
சட்டமன்றத்திலும் முதல்வர் விஜய் நடிக்கிறார்: பரந்தாமன் விமர்சனம்
திரைப்படத்தில் நடிப்பதுபோலவே இப்போது சட்டமன்றத்தில் நடிக்கிறார் விஜய் என பரந்தாமன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘’சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதில் சொல்வதே மரபு. 13 சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிக்கவில்லை. எத்தனை ரீல்ஸ் போடலாம் என்பதை மையமாக வைத்தே முதல்வரின் பதில் இருந்தது. எதிர்க்கட்சித் தலைவரின் 15 கேள்விகளுக்கு முதல்வர் பதில் தரவில்லை. தவெக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து...
சட்டப்பேரவைத் தலைவர் சர்வாதிகார போக்கைகடைபிடிக்கிறார்:திமுக கொறடா எ.வ.வேலு குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையாக இருப்பது போல் இருந்துவிட்டு இரண்டு முறை சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார் என்று திமுக கொறடா எ.வ.வேலு குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை பதிலுரை அளிக்கும்போது, திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா குறித்து ஆவேசமாக பேசியிருந்தார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பளிக்காததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். நேற்று சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின்போது,...
”தளபதிக்கு நன்றி சொன்ன தல”
தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகரும், ரேஸருமான அஜித் குமார் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் குமார் சினிமாவில் நடிப்பதுடன் தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அவரது ரேஸிங் குழு சில பந்தயங்களில் முதல் 3 இடங்களைப் பிடித்து சாதித்துள்ளது. பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்த ஆண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு...
சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா
தமிழக சட்டப்பேரவையின் மாற்று பேரவை தலைவராக (மாற்று சபாநாயகர்) தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி பெண் எம்.எல்.ஏ. சத்யபாமா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று முதன்முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வெற்றிகரமாக வழிநடத்தினார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கமாக, சட்டப்பேரவை நிகழ்வுகளை சபாநாயகர் வழிநடத்துவார். அவர் அவையில் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார். சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகிய இருவருமே...
“எல்லாமே என்னால்தான் நடந்தது என்று நோய்க்கூறு பழனிசாமிக்கு உண்டு”!
சென்னை: “எல்லாமே என்னால்தான் நடந்தது என்று நோய்க்கூறு சிலருக்கு உண்டு. அதில், பழனிசாமியும் சேர்ந்து கொண்டார். ‘நான்தான் எல்லாம் செய்பவன்’ என்ற ‘God Complex’ அதாவது கடவுள் மனப்பான்மையில் பழனிசாமி வாழ்ந்து கொண்டிருக்கிறார். 55 ஆயிரம் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமி, லேப்டாப் பற்றி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?” என அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-ல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 இடங்களில் 10...
நல்லகண்ணுவை பார்க்க யாரும் வரவேண்டாம்: இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று முன்தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை யாரும் வந்து பார்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே கட்சியினர், நண்பர்கள், பொதுமக்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பீகாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசரகதியில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான வாக்காளர்களை மத்திய அரசுடன் இணைந்து...
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நாளை தொடக்கம்
14-ஆவது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நாளை (நவ.28) முதல் சென்னை, மதுரையில் தொடங்குகிறது. 21 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி 1979-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிரான்சில் நடந்த அந்த போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. கடைசியாக கடந்த 2023-ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் ஜெர்மனி கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 13 போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஜெர்மனி 7 முறை பட்டம் வென்று சாதித்துள்ளது. அதற்கு...








