சென்னை: இந்திய கடற்படையை போற்றும் விதமாக கடற்படை சார்பில் சென்னை நேப்பியர் பாலம் அருகே முதன்முறையாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாளை அதிகாலை 4.45 மணி தொடங்கி 6.30 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மாரத்தானில் பங்கேற்பவர்களின் வசதிக்காக நாளைய தினம் அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது அதே வேளையில், எம்.ஜி.ஆர். சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம்...
Category: முக்கியச் செய்திகள்
கதவை உடைத்து சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார்!
தயாரிப்பு நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்தாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்; சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இல்லத்தை இன்று அதிகாலை முதல் போலீசார் சுற்றிவளைத்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் தொடர்பான ஒரு வழக்கு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து அவருக்கு சமன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, “ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில்...
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக காப்பீட்டு சட்டங்கள் (திருத்த) மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை 74 சதவீதம் என்ற அளவில் அந்நிய நேரடி...


