திண்டுக்கல்: அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜக தான் தமிழகத்தை ஆளும் என நாங்கள் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை, என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்டபணிகளை திறந்துவைத்து, 212 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திண்டுக்கல் புரட்சியின் பெயர், எழுச்சியின் பெயர், வீரத்தின் பெயர். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போராடிய வேலுநாச்சியார், ஊமைத்துரையும் தங்கள்...
Tag: DMK
“எல்லாமே என்னால்தான் நடந்தது என்று நோய்க்கூறு பழனிசாமிக்கு உண்டு”!
சென்னை: “எல்லாமே என்னால்தான் நடந்தது என்று நோய்க்கூறு சிலருக்கு உண்டு. அதில், பழனிசாமியும் சேர்ந்து கொண்டார். ‘நான்தான் எல்லாம் செய்பவன்’ என்ற ‘God Complex’ அதாவது கடவுள் மனப்பான்மையில் பழனிசாமி வாழ்ந்து கொண்டிருக்கிறார். 55 ஆயிரம் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமி, லேப்டாப் பற்றி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?” என அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-ல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 இடங்களில் 10...
திருப்பரங்குன்றத்தில் வெளியூர்காரர்களால்தான் பதற்றமான சூழல் ஏற்பட்டது: எம்எல்ஏ கோ.தளபதி
திருப்பரங்குன்றத்தில் வெளியூர்காரர்களால்தான் பதற்றமான சூழல் உள்ளது என திமுக எம்எல்ஏ கோ.தளபதி தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன், கோ.தளபதி எம்எல்ஏ மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கோ.தளபதி எம்எல்ஏ கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சினையுமில்லை, ஒற்றுமையுடன் வாழ்கிறோம். ஃப்வ்வெளியூர்க்காரர்கள் தான் இங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். எனக்கு 72 வயதாகிறது. உச்சி பிள்ளையார் கோயிலில் முதலில் விளக்கு ஏற்றினர்.பின்னர், கிராம மக்கள்...
கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமே தவிர காவி தீபம் ஏற்றப்படக்கூடாது: அமைச்சர் கோவி செழியன்
கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமே தவிர காவி தீபம் ஏற்றப்படக்கூடாதுஎன உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், சட்டத்தின்படி எந்த நெறிமுறைகள் இருந்ததோ அதை முதலமைச்சர் செயல்படுத்தினார். தமிழகத்தில் மக்களிடையே, ஆன்மிகம் என்ற பெயரால் மதத்தின் பெயரில் ஒரு தீயை உருவாக்க நினைத்ததை தமிழக முதல்வர் முறியடித்துள்ளார்.அதன்படியே மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்களும் செயல்பட்டனர்....

