புதுச்சேரி: “பொங்கல் தொகுப்பு நிதியாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். புதுவையில் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.13 ஆயிரம் வழங்க வேண்டும்” என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: போலி மருந்து விற்றதற்காக விற்பனையை நிறுத்த உத்தரவிடப்பட்ட கடைகளில் விற்பனை நடக்கிறதா என சோதனை செய்ய வேண்டும். புதுச்சேரி மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் விநியோகிக்கப்படும் மருந்து...
