திருநெல்வேலி: திருநெல்வேலியில் காயிதே மில்லத் பெயரில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட நூலகம் அமைய இருப்பதாகவும், அதற்கான அடிக்கலை இன்றைக்கு நாட்டியிருப்பதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் ஆற்றிய...
