தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 515 வேட்பாளர்களுக்கான பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில்அக். 6, 9-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் முதல் பட்டியலை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேற்று முன்தினம் வெளியிட்டனர்.
இந்நிலையில், நேற்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், கள்ளக்குறிச்சி 18, விழுப்புரம் 4, வேலூர் 11, திருப்பத்தூர் 12 என மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களுக்கான வேட்பாளர்கள் 45 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் 22, திருநாவலூர் 19, உளுந்தூர்ப்பேட்டை 20, கள்ளக்குறிச்சி 22, சின்ன சேலம் 20, ரிஷிவந்தியம் 23, சங்கராபுரம் 23, தியாகதுருகம் 15, கல்வராயன்மலை 7, முகையூர் 21, திருவெண்ணைநல்லூர் 20 பேர் என மொத்தம் 212 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு 26, குடியாத்தம் 28, கே.வி.குப்பம் 20, கணியம்பாடி 12, பேர்ணாம்பட்டு 14, வேலூர் 10 என 110 வேட்பாளர்களும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் 17, ஜோலார்பேட்டை 24, கந்திலி 20, மாதனூர் 21, நாட்றம்பள்ளி 14, திருப்பத்தூர் 19 என 115 வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ராணிப்பேட்டையில் அரக்கோணம் 6, காவேரிப்பாக்கம் 3,வாலாஜா 5, நெமிலி 5, சோளிங்கர் 8, திமிரி 3, ஆற்காடு 6 என36 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களில்ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கான இடைத் தேர்தல்களில் திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தில் தலா ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளனர்.