அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை இன்று வெளியிட்ட அறிக்கையில், “ அதிமுக கழக அமைப்பின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக்கேற்ப, கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி 7 காலை 10:00 மாலை 5:00 மணி வரை நடக்கும். நடைபெறுகிறது. வேட்புமனுவை 3,4 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
அதிமுகவின் கிளை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகிகளுக்கு டிசம்பர் 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை உட்கட்சி தேர்தல்நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கும் பொன்னையனும், பொள்ளாச்சி ஜெயராமனும் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக சென்னை நேற்று அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கியமான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் (single vote) அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற சிறப்பு தீர்மானத்தை அதிமுக செயற்குழு கொண்டு வந்தது. இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்ய தேர்தலை உடனடியாக அதிமுக அறிவித்துள்ளது.