மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 5 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்போலோ மருத்துவர்கள், செவிலியர்கள் என இதுவரை 154 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். விசாரணை இறுதிக் கட்டத்தைஅடைந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2019-ல் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஆணையத்தின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தற்போது ஆணையம் தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 11-வது முறையாக வழங்கப்பட்ட 6 மாத கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 5 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..