சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு பொன்னாடை மற்றும் புத்தகங்கள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த சஞ்சீப் பானர்ஜி, கடந்த ஆண்டு நவம்பரில் மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது, அவர் தலைமை நீதிபதியாக முழுப் பொறுப்பேற்றுள்ளார்.