மதுரை: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு களாகியும், இறந்தவர்க ளின் உடலை அடக்கம் செய்வதில் பாகுபாடு காட்டுவது வேதனை யானது, என உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள புத்தாநத் தத்தைச் சேர்ந்த முகமது ரசீத் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: புத்தாநத்தத்தில் சுன்னத்துவல் ஜமாத் பள்ளி வாசல் உள்ளது. இப் பள்ளிவாசலுக்கு அருகில் இறந்த இஸ்லாமியர்களின் உடலை புதைக்கும் இடம் உள்ளது.

சுன்னத்துவல் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்துக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் இடையே வழிபாடு, இஸ்லாமிய வழிமுறைகளை கடைபிடிப்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

இதனால், உடல் நலக்குறை வால் உயிரிழந்த எனது தந்தை சிக்கந்தர் பாஷாவின் உடலை, பள்ளிவாசல் பொது மயானத்திலோ அல்லது தவ்ஹீத் ஜமாத் இடத்திலோ அடக்கம் செய்ய மறுக்கின்றனர். எனவே, அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் தந்தை உடலை புத்தாநத்தம் சுன்னத்துவல் ஜமாத்துக்கு சொந்தமான பொது மயானத்தில் அடக் கம் செய்யவேண்டும் என உத்தர விடப்பட்டது.

இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவையும் மீறி, சுன்னத்துவல் ஜமாத் நிர்வாகம் உடலை அடக் கம் செய்ய இடையூறுகளை செய்வதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு களாகியும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் பாகுபாடு காட்டுவது வேதனை அளிக்கிறது. ஒவ்வொரு பிரிவினரும் தனித் தனியாக மயானம் கேட்பதை ஏற்கமுடியாது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் நியமிக் கப்படுகிறார். வக்பு வாரியச் செயலாளர் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்படுகிறார்.

புத்தாநத்தம் பகுதியில் வாழும் இஸ்லாமியர்களில் இறந் தவர்கள் அனைவரையும் ஒரே பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்காக மயானத்தை உள்ளாட்சி நிர்வாகம் ஏன் பராமரிக் கக்கூடாது? இதுகுறித்து வக்பு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சி யர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசா ரணையை ஆக.18-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.