புதுச்சேரி மாநிலம் ஏனாமில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ள பெருக்கால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது ஆந்திர, தெலுங்கானாவில் தொடர்மழை பெய்துவருவதால் கோதாவரி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குண்டூரில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை புரிந்துள்ளனர். பாம்புகள் நீரில் அடித்து வரப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அரசு இயந்திரம் முற்றிலுமாக செயல் இழந்ததாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.