தமிழக உளவுத்துறை இந்து, தேச விரோதமாக செயல்படுகிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மலையாளத்தில் வெளி வந்த ‘ட்ரான்ஸ்’ என்ற திரைப்படம், தமிழில் ‘நிலை மறந்தவன்’ என்ற பெயரில் தமிழகத்தில் திரையிடப்பட்டுள்ளது.

சென்னையில் சில திரையரங் குகளில் திரைப்படத்தை திரையிடக்கூடாது என உளவுத்துறையினரே மிரட்டியுள்ளனர்.

உளவுத்துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் தூண்டுதலால் தான் திரைப்படம் நிறுத்தப்பட்டுள்ளது. இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. நிலை மறந்தவன் திரைப்படத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண் டும். திரையரங்குகளிடம் உளவுத்துறை அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும்.

உளவுத்துறை இந்து விரோதமாக, தேச விரோதமாக நடந்து வருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உளவுத்துறை மோசமாகிவிட்டது. தமிழகத்தில் உளவுத்துறை சரியில்லை என அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.