கரோனா பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) வண்டலூர் உயிரியல் பூங்காவைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஜனவரி 9ஆம் தேதியன்று பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை. அதற்கு பதிலாக ஜனவரி 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நிலைத்த வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி பூங்காவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.