தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசு பல்வேறு வடிவங்களில் இந்தி திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனிடையே புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு அளித்த பதில்கள் இந்தியில் இருந்துள்ளன.

இந்தியில் பதில் அனுப்பப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ஞானசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கும் இந்தி தெரியாது என தெரிவித்த நீதிபதி, ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

#Metro_People #News #NewsUpdates #High_Court #Judge #HindiNews #trending