மதுரை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறும் தேமுதிக வேட் பாளருக்கு 2 பவுன் தங்கச் சங்கிலியை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பரிசாக வழங்குவார் என மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மதுரை மாநகராட்சியில் 73 வார்டு களுக்கு தேமுதிக வேட்பாளர் களை நிறுத்தி உள்ளது. 73-வது வார்டில் மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மணிகண்டன் போட்டியிடுகிறார். இருப்பினும், 27 வார்டுகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.
மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலர் அழகர், மாவட்டச் செயலர் கள் மணிகண்டன், செல்வக்குமார், கணபதி, பாலச்சந்தர் ஆகியோரது ஒருங்கிணைப்பில் அக்கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பிரச் சாரத்தை தொடங்கி உள்ளனர்.
பிரச்சாரத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி யின் பொருளாளர் பிரேமலதா, மாநில நிர்வாகிகள் ஆகியோரை அழைக்கத் திட்டமிட்டிருப்பதா கவும், வெற்றி பெறும் வேட்பாளர் களை ஊக்கப்படுத்த 2 பவுன் தங்கச் சங்கிலி பரிசாக வழங்க இருப்பதாகவும் நிர்வாகிகள் தெரி வித்தனர்.
இது குறித்து அக்கட்சி மாநகர் தெற்கு மாவட்டச் செயலர் மணி கண்டன் கூறியதாவது:
மதுரை வடக்கு, தெற்கு, புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு என அனைத்து இடங்களிலும் தேமுதிக போட்டியிடுகிறது. ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட் சிக்கும் சவாலாக இருப்போம். மதுரைக்காரர் என்ற அடிப்படையில் விஜயகாந்த்துக்கு பெயர் இருக் கிறது. அதிக வார்டுகளில் வெற்றி பெறுவோம். வெற்றி பெறும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா 2 பவுன் சங்கிலியை கட்சித் தலைவர் விஜயகாந்த் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.