டிசம்பர் 16, 17-ம் தேதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக எங்கெங்கு ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் 16.12.2021 தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாகக் குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாலை 4 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மயிலாப்பூர் பகுதி: மாட்டன்குப்பம் அனைத்துப் பகுதி, வி.ஆர்.பிள்ளை தெரு, கற்பக கன்னியம்மன் கோயில் 1 முதல் 5-வது தெரு வரை, பழனியம்மன் கோயில் 1 முதல் 5-வது தெரு வரை, பாரதி சாலை, ராஜா அனுமந்த லாலா தெரு, வெங்கடாசலா நாயக்கன் 1 முதல் 3-வது தெரு வரை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

17.12.2021 (வெள்ளிக்கிழமை):

தாம்பரம் பகுதி: பல்லாவரம் டானரி தெரு, கிரிபித் தெரு 1 முதல் 4 மற்றும் மெயின் ரோடு, சோமசுந்தரம் 1 மற்றும் 2-ம் தெரு, முனிவர் அவென்யூ, பெரும்பாக்கம் நுக்கம்பாளையம் மெயின் ரோடு, கோகுல் நகர், ராமையா நகர், சேகரன் நகர், ராதா என்க்லேவ்.”

குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.