சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பானர்ஜி பணியிட மாற்றத்துக்கு மேலும் ஓர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி பானர்ஜியை பணியிட மாற்றம் செய்யும் கொலீஜியம் தீர்மானத்தை திரும்ப பெற சிஜேஏஆர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நீதித்துறை கடமை பொறுப்பு மற்றும் சீர்த்திருத்த இயக்கம் (சிஜேஏஆர்) என்ற அமைப்பு உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி பானர்ஜியை மாற்றியதற்கான காரணம் என்ன? தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பணியிட மாற்றத்துக்கான காரணங்களை வெளிப்படையாக தெரிவிக்க சிஜேஏஆர் கோரிக்கை விடுத்துள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தன்மை மற்றும் நேர்மையையும் கட்டிக்காக்கவும் சிஜேஏஆர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.