பாரதி கண்ணம்மாவில், நெஞ்சு வலி வந்தது போல பாரதியின் அப்பா நடித்து மொத்த குடும்பத்தையும் ஏமாற்றுகிறார். பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க தான் இந்த நடிப்பு.

பாரதி கண்ணம்மா சீரியல் புரமோ ஞாயிறன்று வெளியான நிலையில் புரமோவில் பாரதி அப்பாவுக்கு நெஞ்சுவலி வருவது போலவும், அவரை பார்க்க வரும் கண்ணம்மாவிடம் கடைசி ஆசையாக பாரதியுடன் சேர வேண்டும் என சத்தியம் வாங்குவதாக காட்சிகள் காட்டப்பட்ட நிலையில் இது எல்லாமே வெறும் நாடகம் என்பது இன்றைய எபிசோடில் தெரிய வருகிறது. வீட்டில் இருக்கும் பாரதியின் அப்பா நெஞ்சு வலிக்கிறது என கத்த, உடனே சவுந்தர்யா பதறுகிறார். பாரதி இருக்கும் ஆஸ்பிட்டலுக்கு போலாம் என முடிவு எடுத்து சவுந்தர்யாவும் அகிலும், அவரை ஆஸ்பிட்டலுக்கு அழைத்து செல்கின்றனர். பாரதியின் அப்பா வலியால் துடிப்பதை பார்த்த சவுந்தர்யா கண்ணீர் வடிக்கிறார்.

ஆஸ்பிட்டலுக்கு வந்த அப்பாவை பாரதி செக் செய்கிறான். ஆனால் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நெஞ்சு வலிக்கான அறிகுறியே இல்லை என்பது தெரிந்து விடுகிறார். ஆனாலும் அப்பா வலியால் துடிப்பதற்கு காரணம் தெரியாமல் குழம்புகிறான். ”உங்களுக்கு ஒன்னும் இல்லை அப்பா. நீங்க வீட்டுக்கு போலாம்” அப்படின்னு பாரதி சொன்னதும் அவரின் முகத்தில் பதட்டம் வந்து இன்னும் அதிகமாக நடிக்க ஆரம்பிக்கிறார். அப்போது தான் அகிலுக்கும் சவுந்தர்யாவுக்கு சந்தேகம் வருகிறது. நீ போலி டாக்டர், காபி அடிச்சு பாஸ் பண்ணியா அப்படி இப்படின்னு பாரதியை திட்டுகிறார். அப்படியே சவுந்தர்யாவுக்கு அகிலுக்கும் எல்லாமே நாடகம் என்பதையும் தெரியப்படுத்திவிடுகிறார். அதை புரிந்து கொண்ட இருவரும் அவருடன் சேர்ந்து கொண்டு பயங்கரமாக நடிக்க தொடங்குகிறார்கள்.

அப்போது தான் பாரதியின் அப்பா, கடைசி ஆசை என கண்ணம்மாவை பார்க்க வேண்டும் என்கிறார். இதை விரும்பாத பாரதி, வேண்டாம் என்கிறார். நாடகமே கண்ணமா வர வேண்டும், பாரதியும் கண்ணம்மாவுக்கும் தற்காலிகமாக சந்திக்க வேண்டும் என்பதற்கு தானே. இதனால் பாரதியின் பேச்சை மீறி கண்ணம்மாவுக்கு ஃபோன் செய்கிறார் சவுந்தர்யா, வீட்டில் இருக்கும் கண்ணம்மா ஃபோனை எடுத்ததும் ஷாக் ஆகிறார். உடனே ஆஸ்பிட்டலுக்கு கிளம்புகிறார்.

அந்த நேரம் பார்த்து வெண்பா ஃபோன் செய்கிறாள். பதற்றத்தில் இருக்கும் கண்ணம்மா வெண்பா ஃபோனை கட் செய்கிறாள். மறுபடியும் வெண்பா ஃபோன் அடிக்க, கடுப்பில் திட்டிவிடுகிறாள். அதற்குள் தனது நடிப்பு பற்றி மனைவி மற்றும் அகிலனிடம் பாரதியின் அப்பா பேசிக் கொண்டிருக்க மொத்த குடும்பமும் சேர்ந்து முட்டை போண்டா சாப்பிடுகிறார்கள். திடீரென்று வரும் பாரதி சவுந்தர்யாவையும் அகிலனையும் சரமாரியாக திட்டுவிடுகிறான். அப்பா முட்டை போண்டா சாப்பிட்டதை பாரதி கவனிக்கவில்லை. அந்த நேரத்தில் தான் சரியாக கண்ணம்மா எண்ட்ரி. இதற்கு தானே ஆசைப்பட்டார்கள் மொத்த குடும்பமும். போன வாரம் பாரதி நடித்து ஒரு ஷாக்கை கொடுத்தார். இந்த வாரம் அவரின் அப்பா நடிப்பை தொடங்கி இருக்கிறார். மொத்தத்தில் சவுந்தர்யா குடும்பமே நடிப்பில் பின்னி எடுக்கிறார்கள்.