தொடர் விடுமுறையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பதால் அங்கு முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தொடர் தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகள் மோயர் சதுக்கம், தூண்பாறை உள்ளிட்ட பகுதிகளை கண்டும், ஏரியில் சவாரி செய்தும் மகிழ்கின்றனர். மேலும் அவ்வப்போது பெய்யும் மழையும் கொடைக்கானலை இதமான சூழலில் வைக்கிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பதால் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தொடர் வார விடுமுறை மற்றும் கடும் கோடையையொட்டி தமிழகம் மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால் கொடைக்கானலில் பல்வேறு முக்கிய இடங்களில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.