தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், விடுமுறை முடிந்து நாளை மீண்டும் தொடங்குகிறது.

நாளை அறநிலையத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம், 5-ம் தேதி போக்குவரத்து, சுற்றுலா, 6-ம் தேதி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 7-ம் தேதி திட்டம், வளர்ச்சி, பொது, சிறப்பு திட்ட செயலாக்கம், நிதி, மனிதவளம் உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

மே 9, 10-ம் தேதிகளில் உள்துறையின் கீழ் வரும் காவல், தீயணைப்புத் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று, இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிக்க உள்ளார்.

இதை முன்னிட்டு, நாளை முதல் நடைபெற உள்ள துறைகளின் அமைச்சர்கள், அலுவலர்களுடன் முதல்வர் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.