நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ‘நான் ரெடி ’ பாடலுக்கு பிரபலங்கள் பலரும்  ரீல்ஸ் பதிவிட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ’நா ரெடி’ பாடலுக்கு நடனமாடி இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்ட  பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் சிங்கள் பாடலான ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் கடந்த மாதம், நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த பாடலுக்கு பிரபலங்கள் பலரும்  நடனமாடி வீடியோ பதிவிட்டு வந்தனர். அந்த வகையில், தற்போது இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது ட்விட்டர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதே நேரத்தில் ஷிகர் தவான் ஆடிய அந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ரசிகர்கள் தற்போது இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் அக்டோபர் 19 தேதி திரைக்கு வரவிருக்கிறது.