நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடுகளுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தனித்தனியே தொடங்கியுள்ளன.
இந்நிலையில், முதலாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகளை நவ.15-ம்தேதி தொடங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு கூறும்போது, “அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தவுடன் தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கும். எனவே, நவ.15-ல் முதலாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகளை தொடங்க தயாராக உள்ளோம்” என்றார்.