மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துணை இயக்குநர் மகாலெட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.7-ம் தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித் தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இதில் பங்கேற்க விருப்பமுள் ளோர், உரிய கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்துக்கு நேரில் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.