புதுச்சேரியில் ராஜ்யசபா தேர்தலுக்காக 8 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. சுயேட்சையாக ஒரு நபர்களால் தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அவர்களது மனுக்கள் முன்மொழியப்படாததால் நிராகரிக்கப்பட்டது.

புதுச்சேரிக்கு மாநிலங்களை தேர்தலில் பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.  இது தொடர்பாக வரும் 27ம் தேதி  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரி முனிசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 10 சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜகவுக்கு நியமன உறுப்பினர்களை சேர்த்து 9 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.  இந்நிலையில், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு எம்.பி. சீட் யாருக்கு என்பதில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இழுபறி நிலவியது. இறுதியில் பாஜகவுக்கு எம்.பி.சீட்டை என்.ஆர்.காங்கிரஸ் ஒதுக்கியது.

ராஜ்யசபா எம்பி காண வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இன்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் 6 வேட்பாளர்கள் 8 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் முன் மொழியாததால் ஐந்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு பாஜக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த செல்வகணபதி மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரியும் , சட்டப்பேரவை செயலருமான முனிசாமி கூறும்போது, புதுச்சேரியில் ராஜ்யசபா தேர்தலுக்காக 8 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. சுயேட்சையாக ஒரு நபர்களால் தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அவர்களது மனுக்கள் முன்மொழியப்படாததால் நிராகரிக்கப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் செல்வகணபதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் பெறப்பட்டன  என்று தெரிவித்தார்.

பாஜக வேட்பாளர் மனு மட்டும் ஏற்கப்பட்டுள்ளது என்றும், மனுக்களை பரிசீலிக்கும் 27 ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் அன்று மாலை பரிசீலனை முடிந்த பிறகு அதிகாரப்பூர்வமாக  செல்வகணபடி ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்படுவார் என தேர்தல் நடத்தும் அதிகாரி முனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி இருந்து ராஜ்ய சபா எம்பியாக காங்கிரஸில் இருந்து மூன்று பேரும் அதிமுக மற்றும் திமுகவில் இருந்து தலா இரண்டு பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதன்முதலாக 1963ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் அபிரகாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து 1969 இல் திமுக சிவப்பிரகாசம், 1977ல் அதிமுக விபிஎம் சாமி, 1985 மற்றும் 1991 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டனர். 1997 இல் திமுக திருநாவுக்கரசு, 2003 இல் காங்கிரஸ் நாராயணசாமி, 2009 இல் காங்கிரஸ் கண்ணன், 2015இல் அதிமுக கோகுல கிருஷ்ணன் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.