பெற்றோர்கள் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளி திறப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிவித்த அமைச்சர், பள்ளிக்கு கட்டாயம் மாணவர்கள் வரவேண்டும் என சொல்ல கூடாது என அறிவுறுத்தினார்.

தனியார் பள்ளிகள் ஒன்றாம் வகுப்பு முதல் வகுப்புகளை அனுமதிக்க வேண்டும் என கேட்டு வருவதாகவும், பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் அரசு முடிவெடுக்க வில்லை எனவும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்தார்.

கோவையில் தனியார் ஹோட்டலில் இந்திய தொழில் துறை கூட்டமைப்பு ஏற்பாட்டின் பேரில் தனியார்  பள்ளி நிர்வாகிகளுடன் , தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்திருடன்  ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  தனியார் கல்வி நிறுவனங்கள் கொரொனா காரணமாக பொருளாத ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர் என்றும் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் ஒவ்வொரு  எதிர்பார்ப்பு இருக்கும் என தெரிவித்த அவர், தனியார் பள்ளிகளின் கோரிக்கையினை எந்த அளவு சரி செய்ய முடியும் என்பதை உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என கூறினார்.

தொடர்ந்து, 6 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என கூறிய அவர், இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது எனவும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற தனியார் பள்ளி நிர்வாகங்கள்  ஒன்றாம் ஆம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்கவேண்டும் என  கேட்டு வருகின்றனர் எனவும் இது ஆச்சர்யமளிக்கின்றது எனவும் தெரிவித்தார்.

அதே வேளையில் பெற்றோர்கள் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளி திறப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிவித்த அமைச்சர், பள்ளிக்கு கட்டாயம் மாணவர்கள் வரவேண்டும் என சொல்ல கூடாது என அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறினார்.  பள்ளியில் ஒரு மாணவருக்கு கொரோனா வந்தாலும்  உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை பொருத்தே அடுத்தகட்ட முடிவு செய்யப்படும் என கூறிய அமைச்சல் அன்பில்  மகேஷ், நீட் தேர்வுக்கான சட்டப் போராட்டம் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது  என குறிப்பிட்டார்.