புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் அருகே இறையூர் வேங்கைவயல் என்ற கிராமத்தில், குடிநீர் டேங்க்கில் மலம் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பட்டியல் சமூக மக்கள் வசித்து வரும் அந்த கிராமத்தில், கடந்த இரண்டு நாட்களாக சிலருக்கு வாந்தி, மயக்கம், ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது. குடிநீரில் பிரச்னை இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதையடுத்து, டேங்க்கை திறந்து பார்த்தபோது மலம் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த செயலை செய்தது யார் என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்!