ஓராண்டுக்குள் முடிப்பதாக தொடங்கி,2 ஆண்டுகளை கடந்தும் ‘ஸ்மார்ட் சிட்டி’திட்டத்தில் புதுச்சேரி அண்ணா விளை யாட்டு அரங்க கட்டுமான பணி நடை பெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. மிக தாமதமாவதால் அரங்கைச் சுற்றி வியாபாரிகள் கடைகளை அமைத்து விட்டனர்.
புதுச்சேரி நகரப் பகுதிகளில் பல முக்கிய அரசுப் பள்ளிகளுக்கான விளை யாட்டுத் திடலாக திகழந்தது அண்ணா விளையாட்டு திடல். ஒரு கட்டத்தில் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு இவ்விளையாட்டு திடல் பயன்படுத்தப்பட்டதை விட தனியார்பொருட்காட்சிகள், கூட்டங்கள் நடத்தவேஅதிகம் பயன்படுத்தப்பட்டது. விளையாட் டுத் திடலைத் சுற்றி குபேர் பஜாரும் இயங் கியது.
இச்சூழலில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில், அண்ணா திடல் தேர்வாகி, அண்ணா விளையாட்டு அரங்கமாக மேம்படுத்த திட்ட வரையறை தயாரிக்கப்பட்டது. மத்தியஅரசும் இதற்கு ஒப்புதல் அளித்தது.
கடந்த 2021 ஜனவரியில் ரூ. 12.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அண்ணா விளையாட்டு அரங்குக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. குறிப்பாக 14,495 சதுர அடியில் பல முக்கிய விளையாட்டு அம்சங்களுடன் விளையாட்டு அரங்கம் தயாரிக்க திட்டமிடப்பட்டது.
‘இயற்கை அழகு சூழலுடன் புல்வெளி, இருக்கைகள், உயர்கோபுர மின் விளக்கு ஆகியவை நவீனமாக அமைக்க திட்ட மிடப்பட்டு ஓராண்டுக்குள் பணிகள் முடிக் கப்படும்’ என்று உறுதி தரப்பட்டது.
பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளை கடந்த நிலையிலும், கட்டுமானப் பணிகள் மிகவும் மெதுவாகவே நடந்து வருகிறது. 2 ஆண்டுகளை கடந்தும் பணிகள் முடியாததால், அரங்கைச் சுற்றி பணிகள் முடிவதற்கு முன்பாகவே பலரும் கடைகளை வைத்து விட்டனர்.
நிதி ஒதுக்கப்பட்டும், நகரின் மையப் பகுதியில் இருந்தும் மத்திய அரசு திட்டமான ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தேர்வாகியும் பணிகள் மிகமிக மந்தமாக பணிகள் நடக்கின்றன.
விளையாட்டில் ஆர்வம் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தரப்பில் கூறுகையில், “எங்களுக்கு விளையாடபுதிய அண்ணா விளையாட்டு அரங்கம் திறக்கப்படும் என காத்திருக்கிறோம். பள்ளி முடிந்து செல்லும்போது ஆவலுடன் பார்ப்போம். வரும் கல்வியாண்டு தொடங் கும் முன்பாக இதை திறப்பார்களா?” என்று கேட்கின்றனர்.
தற்போதுள்ள சூழலைப் பார்த்தால், இப்பணிகள் நிறைவடைய பல மாதங் களாகும் என்பதே நிதர்சனம். பள்ளி முடிந்து செல்லும்போதுஆவலுடன் பார்ப்போம். வரும் கல்வியாண்டு தொடங்கும் முன்பாகஇதை திறப்பார்களா?