தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதனை நம்பித்தான் தமிழக மக்கள்திமுகவுக்கு வாக்களித்தனர்.

ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமானவாட் வரியை விதிக்கும் திமுக அரசு, விலை உயர்வுக்கு மத்தியஅரசை மட்டும் குறை கூறுகிறது.மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது.பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர தமிழக நிதியமைச்சர் ஜிஎஸ்டி கூட்டத்தில் கோரிக்கை வைப்பாரா என்று கேட்க விரும்புகிறேன்.

திமுகவின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவே அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர்.அதிமுகவின் இந்த போராட்டத்தை பாஜக வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.