திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின்போது நியாயத்தின் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றி என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின்போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கட்சி ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

பின்னணி

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி. கடந்த அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருந்தார். பதவிக் காலத்தின்போது, தனக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங் களுக்கு விதிகளை மீறி பல கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் கிராமங்களில் தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்கு களாக மாற்றுவதில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகவும் சென்னை, கோவையில் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி உள் ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளில் ஊழல் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

அதிமுக ஆட்சியில் ஒப்பந்தப் பணி பெற்றுத் தருவதாக கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்துவிட்ட தாக, கோவையைச் சேர்ந்த திரு வேங்கடம் என்பவர், வேலுமணி உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை பெருநகர காவல் துறையில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இதேபோல் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் பி.கங்கா தரன், சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் சமீபத் தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், ‘2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை எஸ்.பி.வேலுமணி தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் பினாமி நிறுவனங்கள், அதன் உரிமையாளர்களுடன் இணைந்து, அரசு விதிகளை மீறி ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு ஊழலில் ஈடுபட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் ரூ.464 கோடி, கோவை மாநகராட்சியில் திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தத்தில் ரூ.346.81 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது. எனவே வேலுமணி, அவரது சகோதரர், பினாமி நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.

அதன்பேரில் வேலுமணி, அவ ரது சகோதரர் எஸ்.பி.அன்பரசன், கே.சி.பி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கே.சந்திரபிரகாஷ், கே.சி.பி நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சந்திரசேகர், எஸ்.பி.பில்டர்ஸ் உரிமையாளர் ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, சி.ஆர்.கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் கு.ராஜன் ஆகியோர் மீதும் 10 நிறுவனங்கள் மீதும் கூட்டுசதி, மோசடி, ஊழல் உள்ளிட்ட 7 பிரிவு களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி கந்தசாமி உத்தரவின்பேரில், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட தொடர்புடையவர்களின் வீடுகளில் நேற்று காலை 7.05 மணிக்கு சோதனை தொடங்கியது. கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

இடையர்பாளையத்திலுள்ள எஸ்.பி.அன்பரசனின் வீடு, வட வள்ளியில் உள்ள பொறியாளர் சந்திரசேகர் வீடு, சந்திரபிரகாஷ் வீடு, புலியகுளத்தில் உள்ள கேசிபி நிறுவன அலுவலகம், மதுக்கரை யில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா வீடு, பொள்ளாச்சியில் உள்ள அன்பரச னின் நண்பர் வீடு உள்ளிட்ட இடங்கள், கிராஸ்கட் சாலையிலுள்ள நகைக்கடை, ஓட்டல்கள், பண்ணை வீடு என கோவையில் மட்டும் 35 இடங்களில் சோதனை நடந்தது.

சோதனையின்போது கே.சி.பி. நிறுவன மேலாண் இயக்குநர் சந்திர பிரகாஷ், தனக்கு நெஞ்சு வலிப்ப தாக கூறியதால், தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். வேலுமணியின் நெருங்கிய நண் பரும் கட்சி நிர்வாகியுமான கே.சி.பி. நிறுவன இயக்குநர் ஆர்.சந்திர சேகர் வீட்டில் ஏராளமான ஆவணங் கள், வரவு-செலவு குறித்த குறிப்புகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்படும் தகவல் அறிந்தவுடன் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சுகுணாபுரத்தில் உள்ள அவரது வீட்டு முன்பு குவிந்தனர். எம்.எல்.ஏக்கள் பொள் ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ஜூனன், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், அமுல் கந்த சாமி ஆகியோரும் எஸ்.பி.வேலு மணி வீடு முன்பு திரண்டனர். திமுக அரசைக் கண்டித்தும், காவல்துறையைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

முதல் தகவல் அறிக்கை

முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2018-ல் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக் கத்தின் ஜெயராமன் ஆகியோர் அளித்த புகாரில் நீதிமன்ற உத்தர வின்படி முதற்கட்ட விசாரணை நடத்தப்படவுள்ளது. சி.ஏ.ஜி. அறிக் கையின்படி, ஊழல் குற்றத்துக்கான முகாந்திரம் இருப்பதால் வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014-ல் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவியேற்ற பின், தனது அதிகாரத்தை பயன் படுத்தி, வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள் சார்ந்த நிறுவனங் களுக்கு ரூ.462.02 கோடி மதிப் பிலான சென்னை மாநகராட்சி டெண்டரும் ரூ.346.81 கோடிக்கான கோவை மாநகராட்சி டெண்டரும் என மொத்தமாக ரூ.810 கோடிக் கான டெண்டர்களை பிரித்து கொடுத்துள்ளார்.

மேலும், சி.ஆர்.கன்ஸ்ட்ரக் சன்ஸ் என்ற நிறுவனம் 6 ஆண்டு களில் 11,363 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. 10 நிறு வனங்களின் மொத்த லாபம் குறுகிய காலத்தில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு குறிப் பிடப்பட்டுள்ளது.

சென்னை எம்.ஆர்.சி. நகர் சத்ய தேவ் அவென்யூவில் உள்ள தனி யார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தம்பி அன்பரசனின் வீட்டில் வேலுமணி தங்கி இருந்தார். அங்கு 4 வீடுகளில் சோதனை நடைபெற் றது. முன்னதாக சோதனை நடை பெறுவதை அறிந்ததும், அங் கிருந்து சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதிக்கு எஸ்.பி.வேலுமணி புறப்பட்டுச் சென்றார்.

சென்னை ஆழ்வார்பேட்டை சீத் தாம்மாள் காலனியில் உள்ள நமது அம்மா நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திலும் அங் குள்ள கேசிபி நிறுவனத்தின் அலு வலகம், கோடம்பாக்கம் ரெங்க ராஜாபுரத்தில் உள்ள வேலுமணி யின் நண்பரின் வீடு மற்றும் கேசிபி இன்ஃப்ரா நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப் பட்டது.

சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளரும் எஸ்.பி.வேலுமணியின் உறவினருமான நந்தகுமாரின் அடையாறு காந்தி நகர் வீடு, மற்றொரு தலைமைப் பொறியாளர் புகழேந்தியின் வில்லி வாக்கம் வீடு ஆகிய இடங் களிலும் சோதனை நடந்தது. தேனாம்பேட்டை ஆலம் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம், ஆழ்வார்பேட்டை ஏஆர்இஎஸ்பிஇ இன்ப்ரா நிறுவனம், மாதவரத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் அய்யாதுரை வீடு மற்றும் அலுவலகங்களிலும் போலீஸார் சோதனை நடத்தினர்.

கோவையில் 35 இடங்கள், சென் னையில் 15 இடங்கள், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா ஒரு இடம் என மொத்தம் 52 இடங்களில் சோதனை நடந்தது. சோதனையில் கிடைத்த தகவல்களின் அடிப்படை யில், மேலும் 8 இடங்களில் சோதனை நடந்தது.

இந்நிலையில் இவற்றில் 8 இடங் களில் சோதனை முடிக்கப்பட்டுள் ளது. மீதி இடங்களில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. இவற் றில் பல ஆவணங்களும் டெண் டர் தொடர்பான டிஜிட்டல் ஆவ ணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இதுவரை ரூ.13 லட்சம் சிக்கியுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலுமணியிடம் விசாரணை

இதனிடையே எம்எல்ஏக்கள் விடுதியில் இருந்த எஸ்.பி.வேலு மணியின் அறையில் சோதனை நடத்தினர். பின்னர் அவரிடம் சுமார் 4 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.

முதல்வருடன் டிஜிபி ஆலோசனை

எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி கந்தசாமி நேரில் சந்தித்து பேசினார். தலைமைச் செயலகத்தில் நேற்று மாலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனைகள், கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும் முதல்வருடன் டிஜிபி கந்தசாமி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.