மும்பை பங்குச்சந்தையில் செவ்வாய்கிழமை வர்த்தகம் முடிவைடையும்போது சென்செக்ஸ் 288 புள்ளிகள் (0.48 சதவீதம்) சரிந்து 59,544 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 74 புள்ளிகள் (0.05 சதவீதம்) சரிந்து 17,656 ஆக இருந்தது.

பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. வர்த்தக நேர தொடக்கத்தில் 150 புள்ளிகள் ஏற்றத்தில் இருந்த சந்தை, பின்னர் ஏற்ற இறக்குத்துடனேயே காணப்பட்டது. 9.34 மணியளவில் சென்செக்ஸ் 31.05 புள்ளிகள் உயர்வுடன் 59862.71 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் 227.10 புள்ளிகள் உயர்ந்து 17803.40 ஆக நிலைகொண்டிருந்தது.

இந்நிலையில், பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது சென்செக்ஸ் 287.70 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59543.96 ஆக நிலைகொண்டிருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி74.40 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17656.35 ஆக இருந்தது.

வர்த்தக நேரத்தின்ஆரம்பத்தில் எஃப்எம்சிஜி மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் குவிந்தததால் லாபத்துடன் தொடங்கிய வர்த்தகம், உலகளாவிய மந்தமான சந்தைப் போக்கு, ஆசிய சந்தை நிலவரம் காரணமாக வீழ்ச்சியை நோக்கிச் சென்றது.

இன்றைய வர்த்தகத்தில் டெக் எம், மாருதி சுசூகி, எல் அண்ட் டி, என்டிபிசி, டாக்டர்ஸ் ரெட்டி லேப், எஸ்பிஐ, எம் அண்ட் எம், இன்ஃபோசிஸ் ஆகியவைகளின் பங்குகள் 0.6 முதல் 3 சதவீதம் வரை ஏற்றம் கண்டிருந்தன. மறுபுறம் பஜாஜ் ஃபின்செர்வ், ஹெச்யுஎல், கோட்டாக் வங்கி, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ, ஏசியன் பெயின்ட்ஸ், இன்டஸ்இன்ட் வங்கி ஆகியவற்றின் பங்குகள் 1 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.