புதுச்சேரி அஜித் ரசிகர்கள், அஜித் திரையுலகுக்குவந்து 29 வருடங்கள் ஆனதை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

அஜித் ரசிகர்கள் விழிப்புணர்வு பேரணி

அஜித் திரையுலகிலகிற்கு வந்து 29 வருடங்கள் ஆனதை கொண்டாடும்வகையில் புதுச்சேரியைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பொதுவாக நடிகர்கள் பைக் ஓட்டும் காட்சியில் முகம் தெரிவதற்காக ஹெல்மெட்டை தவிர்ப்பார்கள்

சினிமா என்றாலும், நாம் தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது என விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கூட ஹெல்மெட் அணிந்தே காட்சி தருவார் அஜித்.

வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸரில் ஹெல்மெட்டுடனே வருவார். அதேபோல் போஸ்டரிலும், நிற்கிற பைக்கில் ஹெல்மெட் அவர் முன்னால் இருக்கும்.

புதுச்சேரி அஜித் ரசிகர்கள், அஜித் திரையுலகுக்குவந்து 29 வருடங்கள் ஆனதை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இருசக்கர வாகம் ஓட்டுகையில் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், போதைப் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான அஜித் ரசிகர்கள் இருசக்கர வாகனங்களுடன் கலந்து கொண்டனர். ஹெல்மெட் அணிய வலியுறுத்தும் போஸ்டர்களும் இடம்பெற்றிருந்தன.

அஜித் ரசிகர்களின் இந்த ஆக்கப்பூர்வமான பேரணிக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர்.