தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் இளநிலை வகுப்புகளுக்கு இன சுழற்சி முறையில் நேரடி கலந்தாய்வு மூலம் மாணவ, மாணவியர் சேர்க்கை நடப்பது வழக்கம்.
கரோனா பரவலால் கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலமே மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு இன்றி நேற்று முதல் தொடங்கியது. ஒவ்வொரு வகுப்புக்கும் சுமார் 40 முதல் 50 பேரை சேர்க்க இந்தமுறை 8 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன.
குறிப்பாக பி.காம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களில் சேர ஆர்வம் அதிகரித்துள்ளது. இனச்சுழற்சி முறையில் மாண வர்கள் சேர்க்கை தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேர்வான மாணவ, மாணவியருக்கு இணையவழி மற்றும் போனில் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எந்த வகையிலும் தகுதியான மாணவர்கள் சேர்க்கை வாய்ப்பை இழக்கக்கூடாது என்ற நோக்கில் இந்த புதிய நடைமுறை பின் பற்றப்படும் என அரசு கல்லூரி முதல்வர்கள் கூறியுள்ளனர்.
மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் இந்த ஆண்டு இளநிலை வகுப்புகளில் சேர 8,242 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பாடவாரியாக தர வரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு, தேர்வான மாண வியர் குறிப்பிட்ட நாளில் அசல் சான்றிதழ்களுடன் துறையின் தலைவரை தொடர்புகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள், மாற் றுத்திறனாளி, தேசிய மாணவர் படை மாணவியருக்கான சிறப்பு கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு தகவல் அனுப் பப்பட்டுள்ளது. அவர்களுக்கு இன்று காலை சிறப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது.
பிற பாடப்பிரிவினருக்கு ஆக. 25 முதல் சேர்க்கை நடை பெறுகிறது என மீனாட்சி மகளிர் கல்லூரி முதல்வர் சூ.வானதி தெரி வித்துள்ளார்.
மதுரை மண்டலத்தில் உள்ள சுமார் 25 அரசு கல்லூரிகளிலும் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் தெரிவிக்கிறது