கீழாண்மறைநாடில் உள்ள பட்டாசு ஆலை தீ விபத்தில் ஜெயராமன் என்பவர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயம் அடைந்த பவானீஸ்வரனுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.