சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.37,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.4,720-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.61.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இம்மாத முதல் தேதியில், ஒன்றியஅரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்ந்ததை தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, இறக்குமதி வரி அதிகரித்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.37,568-க்கும், ஒரு கிராம் ரூ.4,696-க்கும் விற்பனை ஆனது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மார்க்கெட் விடுமுறை. அதனால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. இவ்வாறு தங்கத்தின் விலை நாளுக்குநாள் உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்று திடீரென தங்க விலை மேலும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை வழக்கம் போல் மீண்டும் உயர்ந்து சவரனுக்கு ரூ.192-ல் விற்பனை செய்யப்படுவது இல்லத்தரசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த நாட்களில் மிகப் பெரிய அளவில் உச்சம் அடையும் என்பதில் மாற்றமில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.